போடியில் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் பரமசிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் போடி ஜமீன்தார் வடமலைராஜபாண்டியன் தலைமையில்
பரமசிவன் மலை கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் பூஜையில் கலந்து கொண்ட வழிபாட்டில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்திருக்கும் தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோவிலில் வரும் சித்திரை 1ஆம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கான கொடிமரம் ஊண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. போடி நகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெரியாண்டவர் கோவிலில் இருந்து கொடிமரம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் முதல்வரும் திமுக வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கொடி மர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து கிரிவல பாதையில் கொடிமரம் மலைக் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஓ. பன்னீர்செல்வம் ஜுப்பில் கிரிவல பாதையில் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்று பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். போடி ஜமீன்தார் வடமலை ராஜையபாண்டியன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
