
தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை கிராமத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் உதயசூரியின் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சிலமலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வ.ஊ.சிதம்பரனாரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் , சிலமலை கிளை செயலாளர் முருகன் மற்றும் முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்புசெல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

